மலேசியாவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய இந்திய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் சலுகையானது, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளை மேலும் கடுமையாகப் பரிசோதிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரும் 2027-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல், இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மலேசியாவுக்குள் நுழையச் செல்லுபடியாகும் விசா கட்டாயமாகும்.
இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மைவிசா (MyVISA) இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம் எனக் குடிநுழைவுத் துறை கடந்த நவம்பர் 17-ஆம் தேதி அறிவித்துள்ளது.
இருப்பினும், டிசம்பர் 31-ஆம் தேதியுடன் விசா விலக்கு சலுகை முடிவடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதை மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் புதுடெல்லியில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.








