Nov 20, 2026
Thisaigal NewsYouTube

5 விமானப்படை அதிகாரிகள் உட்பட 11 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
5 விமானப்படை அதிகாரிகள் உட்பட 11 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது

மலேசியாவில் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பேரில், விமானப்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 4.83 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும், ஹோண்டா சிஆர்-வி மற்றும் டொயோட்டா வியோஸ் ஆகிய இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல் கும்பல் கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வந்துள்ளதாகவும், தீபகற்ப மலேசியாவிலிருந்து, சபா மாநிலத்துக்கு ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கடத்தி, அங்கிருந்து பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 விமானப்படை அதிகாரிகளும் நவம்பர் 18 -ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் பொதுமக்கள் 6 பேரில் சிலர் இரண்டு நாட்களும், மற்றவர்கள் ஐந்து நாட்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →