கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
நேற்று இரவு, ஜாலான் செராஸில், வாகனங்களை மோதிச் சென்ற மூன்று கேபிள் திருடர்கள் காவல்படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பல், வாகனங்களை மோதி காவல் படையினரிடமிருந்து தப்ப முயன்ற போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என செராஸ் காவல் படையின் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து நான்கு மூட்டைச் செப்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த நிகழ்வின் காட்சிகள் தீவிரமாகப் பரவி வருகிறது.








