Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சாலைகள் 24 மணி நேரம் மூடப்படாது
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சாலைகள் 24 மணி நேரம் மூடப்படாது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

அடுத்த வாரம் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் போது கோலாலம்பூர் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் எந்தவொரு சாலையும் முழுமையாக மூடப்படாது என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று முடிந்ததும் கோலாலம்பூரில் உள்ள அனைத்து சாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டு விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகில் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பிரதான சாலைகள் முழுமையாக மூடப்படும் என்று கூறப்படுவது தொடர்பில் விளக்கம் அளிக்கையில் டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் காம்ப்ளெக்ஸ் பூங்கா ராயா பகுதி மற்றும் சுபாங் ஆகாயப்படைத் தளம் ஆகியவற்றை இணைக்கும் சாலைகள் மட்டும் வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையின் போது மூடப்பட்டு இருக்கும். மற்ற வேளைகளில் அவை முழுமையாக செயல்பாட்டில் இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News