Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன ஆதரவு பேரணி சமூகமாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு பேரணி சமூகமாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், மார்ச் 2 -

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில், மெனாரா தாபுங் ஹஜி கட்டத்தின் முன்புறம் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு நல்கும் பேரணி, எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களின்றி மிக சுமூகமாக நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மெனாரா தாபோங் தாபோங் ஹாஜியில் தொடங்கிய இந்த அமைதிப் பேரணி, ஜாலான் பார்லிமெண்ட் வாயிலாக Padang Merbok- கில் முடிவுற்றதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர்த டத்துக் அலாவுடின் மஜிட் தெரிவித்தார்.

பேரணி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கு பங்கேற்பாளர்கள் மாலை 6 மணியளவில் கலைந்து செல்லும் வரையில் போதுமான போலீஸ் படையினர் களம் இறக்கப்பட்டதாக டத்தோ அலாவுதீன் குறிப்பிட்டார்.

Related News