Jan 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மீதான உரிமை கோரல்: சூலு வழக்குடன் ஒப்பிட வேண்டாம் – கெடா மந்திரி பெசார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மீதான உரிமை கோரல்: சூலு வழக்குடன் ஒப்பிட வேண்டாம் – கெடா மந்திரி பெசார் விளக்கம்

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.29-

பினாங்கு மாநிலம் மீதான கெடாவின் உரிமை கோரல் முற்றிலும் கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படுவதாக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமது சனுசி முகமது நோர் தெரிவித்துள்ளார்.

இது சபா மீதான சூலு வாரிசுகளின் உரிமை கோரலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், சூலு சுல்தான் முறை தற்போது நடைமுறையில் இல்லை, ஆனால் கெடா மாநிலம், இறையாண்மையுடன் இன்றும் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விவகாரத்தில் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட வரம்புகளை மீறி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்த சனூசி, இது தொடர்பான இறுதி ஆவணங்கள் மற்றும் சட்டக் குழுவின் அறிக்கை இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தயாராகிவிடும் என்று குறிப்பிட்டார். சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்ய தாங்கள் முனையவில்லை என்றும், அனைத்தும் உரிய சட்ட நடைமுறைகளின் படியே கையாளப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

சரியான சட்டக் கட்டமைப்பின் மூலம் இந்த விவகாரத்திற்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த சனூசி , "நாங்களும் புத்தகங்களைப் படிக்கிறோம், எது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.

இன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது சனூசி இந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Related News