Jan 29, 2026
Thisaigal NewsYouTube
APAD ஒப்புதல் கிடைத்த பிறகு ECRL கட்டணத்தை அரசாங்கம் அறிவிக்கும்
தற்போதைய செய்திகள்

APAD ஒப்புதல் கிடைத்த பிறகு ECRL கட்டணத்தை அரசாங்கம் அறிவிக்கும்

Share:

கோத்தா பாரு, ஜனவரி.29-

கிழக்கு கரையோர இரயில் இணைப்பான ECRL ரயில் திட்டத்திற்கான பயணக் கட்டண விகிதங்கள், தரை பொது போக்குவரத்து முகமையான APAD ஒப்புதல் அளித்த பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு முன் சந்தை ஆய்வு செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ள இந்த இரயில் சேவையின் முழுமையான செயல்பாட்டிற்கு முன்னதாகவே கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

"தற்போது எங்களது முழுக் கவனமும் கட்டுமானப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகளை முழுமையாக நிறைவு செய்வதிலேயே உள்ளது," என்று அவர் கிளந்தானின் துஞ்சோங்கில் உள்ள கோத்தா பாரு ECRL நிலையத்திற்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் Malaysia Rail Link Sdn Bhd தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ தர்விஸ் அப்துல் ரசாக் உடனிருந்தார். ECRL ரயில் திட்டமானது, கிளந்தான் தும்பாட்டையும், சிலாங்கூர் கோம்பாக்கையும் இணைக்கும் பெரும் ரயில் திட்டமாகும்.

Related News

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு

சட்டவிரோதக் கழிவு கொட்டுதல்: ஜோகூர் பாரு லாரி ஓட்டுநருக்கு ஒரு லட்சம் ரிங்கிட்  அபராதம் மற்றும் 3 மாதச் சிறை

சட்டவிரோதக் கழிவு கொட்டுதல்: ஜோகூர் பாரு லாரி ஓட்டுநருக்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் மற்றும் 3 மாதச் சிறை

தைப்பூசம்: கோலாலம்பூரில் நாளை 12 சாலைச் சந்திப்புகள் மூடல்

தைப்பூசம்: கோலாலம்பூரில் நாளை 12 சாலைச் சந்திப்புகள் மூடல்

மின்-கழிவு விவகாரம்: சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் கைது

மின்-கழிவு விவகாரம்: சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் கைது

57 சிறார்கள் உட்பட 138 பேர் மீட்பு: மலேசியாவில் மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்புக்கு எதிரான அதிரடி நடவடிக்கை

57 சிறார்கள் உட்பட 138 பேர் மீட்பு: மலேசியாவில் மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்புக்கு எதிரான அதிரடி நடவடிக்கை

வீடற்றவரை இழிவுபடுத்தும் வீடியோ: சமூக ஊடகப் பிரபலத்திற்கு 40,000 வெள்ளி அபராதம்

வீடற்றவரை இழிவுபடுத்தும் வீடியோ: சமூக ஊடகப் பிரபலத்திற்கு 40,000 வெள்ளி அபராதம்

APAD ஒப்புதல் கிடைத்த பிறகு ECRL கட்டணத்தை அரசாங்கம் அறிவ... | Thisaigal News