ஜோகூர் பாரு, ஜனவரி.29-
ஜோகூர் பாருவில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டியதற்காக 51 வயதுடைய லாரி ஓட்டுநர் எஸ். கணேசன் என்பவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதமும், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
செல்லுபடியாகும் உரிமம் அல்லது சுற்றுச்சூழல் துறை இயக்குநரின் அனுமதி இன்றி, SW322 குறியீடு கொண்ட அபாயகரமான திரவக் கழிவுகளைச் சேகரித்து வடிகாலில் கொட்டியதாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, Mukim Tebrau, ஜாலான் கம்போங் மாஜு ஜெயாவில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் இந்தக் கழிவுகளைக் கொட்டியதாகக் கணேசன் ஒப்புக் கொண்டார்.








