கோலாலம்பூர், ஜனவரி.29-
வரும் பிப்ரவரி முதல் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு, கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எச். லீயில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலிருந்து நாளை மார்ச் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தை நோக்கி வெள்ளி இரதம் புறப்படவிருக்கிறது.
இதனையொட்டி கோலாலம்பூர் மாநாகரில் 12 முக்கிய சாலை சந்திப்புகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் முஹமட் ஸாம்ஸுரி இசா தெரிவித்துள்ளார்.
o Jalan Leboh Ampang/Jalan Perak,
o Jalan Tun Perak/Jalan Pudu,
o Jalan Tun Tan Cheng Lock/Jalan Sultan)
o Jalan Sultan/Jalan Hang Jebat
o Jalan Munshi Abdullah/Jalan Dang Wangi)
o Jalan Raja Laut/Jalan Sultan Ismail) உள்ளிட்ட 12 சாலை சந்திப்புகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று முஹமட் ஸாம்ஸுரி இசா தெரிவித்தார்.
இதே போன்று பத்துமலையிலிருந்து வெள்ளி இரதம் மீண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 3:00 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 3-ஆம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு முஹமட் ஸாம்ஸுரி இசா கேட்டுக் கொண்டார்.








