கோலாலம்பூர், ஜனவரி.29-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் வான் அப்துல் லாத்திஃப் வான் மற்றும் அவரது துணை அதிகாரிகளில் ஒருவரையும் கைது செய்துள்ளது.
மின்-கழிவு மேலாண்மையில் நிலவும் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக மின்-கழிவு மேலாண்மையில் இந்த முறைகேடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுச் சூழல் துறையின் இரு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்தை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.








