Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மனம் நிறைகின்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரஸ்வதி பூஜை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மனம் நிறைகின்றது

கெடா ,அக்டோபர் 10-

நவராத்திரி விழாவையொட்டி முப்பெரும்தேவிகளில் ஒருவரான கலைமகள், சரஸ்வதி தேவியின் உன்னத நாளான சரஸ்வதி பூஜையையொட்டி இன்று கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மனம் நிறைவை தருகிறது என்பதுடன் பெரிய வரமாக தாங்கள் கருதுவதாக பிரபல முத்தையாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன் தம்பதியர் பெருமிதம் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜையை லங்காவி உட்பட கெடாவிலும், பெர்லிஸிலும் உள்ள 59 தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சுவையான சைவ உணவை வழங்கி வருகின்றனர் கெடா சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள முத்தையாஸ் நிறுவனம்.

இவ்வருடத்துடன் 24 ஆவது ஆண்டாக இந்த உன்னதப் பங்களிப்பை முத்தையாஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இது தங்கள் நிறுவனத்தின் சமூகவியல் கடப்பாடுகளில் ஒன்றாகும் என்கிறார் வாசுதேவன் .

இந்தாண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ,பாலர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 12 ஆயிரம் பேருக்கு முத்தையாஸ் நிறுவனம் சார்பில்
மதிய உணவு வழங்கப்பட்டதாக வாசுதேவன் குறிப்பிட்டார்.

கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முத்தையாஸ் நிறுவனத்தின் தோற்றுநரான தமது தந்தை மற்றும் சகோதரனின் கனவே சரஸ்வதி பூஜையன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டமாகும் என்று வாசுதேவன் விவரித்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான முத்தையாஸ் நிறுவனத்தின் இந்த உன்னதப்பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Caption
திரு. வாசுதேவன்,
உரிமையாளர், முத்தையாஸ் நிறுவனம்

Caption

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →