கோத்தா பாரு, ஆகஸ்ட்.02-
மலேசியா-தாய்லாந்து எல்லையில் 99 கிலோமீட்டர் நீள முள்வேலி அமைக்கும் தாய்லாந்து நாட்டின் திட்டத்தை கிளந்தான் மாநில போலீஸ் வரவேற்றுள்ளது.
இது குறித்து Kelantan மாநில போலீஸ் தலைவர் Datuk Mohd Yusoff Mamat கூறுகையில், இத்திட்டமானது எல்லைத் தாண்டிய குற்றங்கள், கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நுழைவுகளை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவும் சட்டவிரோத எல்லைப் பாதைகளை மூடுவதுடன், பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் வேலிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், 3.04 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டம் வரும் 2029-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தின் Narathiwat மாநிலத்தில் Tak Bai முதல் Waeng வரை சுமார் 99 கிலோமீட்டர் நீளத்தில் இந்த முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








