Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-

பினாங்கு தீவின் தெற்கு கடற்பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் 2 dredger கப்பல்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA, பறிமுதல் செய்துள்ளது.

இது குறித்து பினாங்கு மாநில MMEA இயக்குநர் Suffi Ramli வெளியிட்டுள்ள தகவலில், அக்கப்பல்கள் Pulau Rimau பகுதிக்கு தென்மேற்கே 2.7 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இரு கப்பல்களிலும் தலா 5 இந்தோனேசியர்கள் மற்றும் 9 சீன நாட்டவர்கள் பணியாற்றியதாகவும், அவர்களில் 28 மற்றும் 31 வயதுடைய இரு இந்தோனேசியர்கள் கப்பல் தலைவர்களாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக்காக ஒவ்வொரு கப்பலிலிருந்தும் தலா 3 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட அக்கப்பல்கள் மற்றும் அவற்றில் இருந்த சரக்குகளின் மொத்த மதிப்பு 400 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் Suffi Ramli தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து