Sep 22, 2026
Thisaigal NewsYouTube
சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு
தற்போதைய செய்திகள்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

Share:

சிறை வாழ்க்கை என்பது பணம் மற்றும் செல்வாக்கை பொறுத்தே அமைகிறது என மலேசியப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் யாசின் சுலைமான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை மலேசிய சிறைத்துறை மறுத்துள்ளது.

இது போன்ற குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என சிறைச்சாலையின் கொள்கை பிரிவு மூத்த இயக்குநர் முஹமட் ரோசிடேக் மூசா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் கைதிகளின் தவறான நடத்தை மற்றும் எதிர்மறையான சம்பவங்களை கையாள்வதற்கு முறையான செயல்பாட்டு நடைமுறைகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும், சில சம்பவங்கள் நடப்பதை தாங்கள் ஒப்புக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள முஹமட் ரோசிடேக் மூசா, குற்றச்சாட்டில் கூறப்படும் அளவிற்கு அவை மோசமாக நடப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சிறைத்துறையின் முக்கிய நோக்கம் கைதிகளை சீர்திருத்தி, மறுவாழ்வு திட்டங்களில் கவனம் செலுத்த வைப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளையில், சிறையில் இருந்து விடுதலையான பலர் புதிய வாழ்க்கையை வெற்றிகரமாக உருவாக்கி வருவதாகவும், எனவே எதிர்மறையான அம்சங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News