Sep 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில், அவரது சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகவும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைத்த கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொடர்ந்த வழக்கில் வரும் ஜனவரி 7ஆம் தேதி அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியம் எடுத்த இந்த முடிவை ரத்து செய்யவும், அது சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் செல்லாது என அறிவிக்கவும் வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே நீதிமன்ற மறு ஆய்விற்கு அனுமதி மறுத்த நிலையில், அதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் நஜிப்புக்கு கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கி, மீதமுள்ள தண்டனையை 2028 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்தது.

இதற்கு 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை மீறினால் மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம்.

இந்த வழக்கை நீதிபதி லிம் சோங் ஃபோங் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

வழக்கறிஞர் மன்றம் தரப்பில், மன்னிப்பு வாரியத்தின் முடிவுகள் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்படக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

மறுபுறம், அரசு தரப்பு மற்றும் நஜிப்பின் வழக்கறிஞர்கள், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பு விதி 42-ன் கீழ் மாமன்னருக்கு உரியது என்றும், அந்த முடிவு நீதிமன்ற மறு ஆய்விற்கு உட்பட்டதல்ல என்றும் வாதிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி வழங்கப்படவுள்ள அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பு, 2024-ஆம் ஆண்டு நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் மன்றத்தின் பிரதான நீதிமன்ற மறு ஆய்வு வழக்கு தொடர்ந்து செல்லுமா? என்பதை தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு