Sep 22, 2026
Thisaigal NewsYouTube
கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்
தற்போதைய செய்திகள்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

Share:

கூச்சிங் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 24 மணி நேர கடைகள் மீது இரண்டு தனித்தனி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கிங் செண்டர் பகுதியில் இரவு 7.05 மணியளவில் கடைக்குள் பட்டாசுகள் வீசப்பட்ட நிலையில், பின்னர் ஜாலான் கிரின் பகுதியில் உள்ள மற்றொரு கடைக்குள் மர்மப் பொருள் வீசப்பட்டதில் இரண்டு முறை வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்து, கருப்பு நிற ஆடைகளில் வந்த மர்ம நபர்கள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அலேக்சன் நாகா சாபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடங்களில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களோடு, சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்