Sep 22, 2026
Thisaigal NewsYouTube
தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்
தற்போதைய செய்திகள்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

Share:

மாணவர்களுக்கான தனியார் பயிற்சி மையங்களில் விதிக்கப்பட்டிருந்த 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் P வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிபந்தனையை நீக்குவதற்கான அமைச்சகத்தின் முடிவை வரவேற்றுள்ள அவர், இந்த மாற்றம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமா? அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களின் உரிமம் புதுப்பிப்பதற்கும் பொருந்துமா? என்பதை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், குழப்பங்களைத் தவிர்க்க, இது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் கல்வி அமைச்சின் இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தனது கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனையை நீக்கும் அமைச்சின் முடிவு, மலேசியக் கல்வித்துறையைப் பொறுத்தவரை சரியான முடிவு என்றும் பி. கமலநாதன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயிற்சி மையங்களை மதிப்பிடும் போது, பங்குதாரர்களின் இன அடிப்படையிலான பங்கு விகிதத்தை விட ஆசிரியர்களின் தரம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்றல் முடிவுகள் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News