May 24, 2026
Thisaigal NewsYouTube
மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- தந்தை கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- தந்தை கோரிக்கை

Share:

கோட்டா பாரு ,ஆகஸ்ட் 21-

8 வயது பிள்ளை சித்ரவதைப்படுத்தப்பட்டு உயிரிழந்த விவகாரம் குறித்த விசாரணை சார்ந்த தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அப்பிள்ளையின் உயிரியல் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பிள்ளையின் உயிரிழப்பு தனக்கு அதிர்ச்சியான மற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்று என்று 32 வயதான முகமது சுல்ஹாஃபிஸ் சுல்கர்னைன் தெரிவித்துள்ளார்.

அதோடு, அவரும் அவரது முன்னாள் மனைவியும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பிறகு, அந்த சிறுமி முழுமையாக தாயின் பராமரிப்பில் இருந்தததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், தனது மகளின் மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று முஹம்மது சுல்ஹாஃபிஸ் வலியுறுத்தினார்.

முன்னதாக, ரவாங், பந்தர் தாசிக் புத்தேரி -இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அச்சிறுமி உயிரிழந்ததை அடுத்து, அவரது தாயும் மாற்றான் தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

Related News