Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குடிநுழைவு அதிகாரியின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரிங்கிட் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு அதிகாரியின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரிங்கிட் கண்டுபிடிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.15-

வேலை தேடி மலேசியாவிற்கு வரும் அந்நிய நாட்டவர்களிடம் எவ்வித சோதனையும் நடத்தாமல் செட்டிங் முகப்பிடங்கள் மூலம் நாட்டிற்குள் நுழைய அனுமதித்தது மூலம் பெரியளவில் லஞ்சம் பெற்று வந்த குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதில், ஒருவரின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மட்டும் 15 லட்சம் ரிங்கிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செட்டிங் முகப்பிடங்களின் வாயிலாக அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்த குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஒருவர் மட்டும், தபுங் ஹஜி நிதியகத்தில் 10 லட்சம் ரிங்கிட் சேமிப்பைக் கெண்டுள்ளார்.

10 லட்சம் ரிங்கிட் உட்பட இதர தொகைகள் அனைத்தும் அந்த அதிகாரி, தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் வங்கிச் சேமிப்பாகக் கணக்கு வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News