Jul 26, 2026
Thisaigal NewsYouTube
கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

Share:

கங்கார், ஜூலை.26-

பெர்லிஸ் மாநிலத்தின் கங்கார் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மனித எலும்புக்கூடு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் Yusharifuddin Mohd Yusop வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணியளவில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த மூட்டையைக் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கண்டெடுக்கப்பட்ட எலும்பு எச்சங்கள் மேலதிக விசாரணைக்காக Tuanku Fauziah மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் Yusharifuddin Mohd குறிப்பிட்டுள்ளார்.

Related News