May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமலுக்கு வருகிறது

Share:

ஜன.11-

தேசியச் சேவைப் பயிற்சித் திட்டம் 3.0றின் பரிட்சார்த்த சோதனை நாளை தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட அத்திட்டம் கிட்டதட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக கோலாலம்பூரில் உள்ள சேமப்படை ராணுவ முகாமொன்று பயன்படுத்தப்படுகிறது. நாளை முழுவதிலும் இருந்து 130க்கும் மேற்பட்ட தன்னார்வப் பங்கேற்பாளர்கள் அம்முகாமில் பதிந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

18ட்டில் இருந்து 20 வயது வரையிலான அனைத்து பங்கேற்பாளர்களும் நாளை முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு ராணுவ மற்றும் தேசியப் பயிற்சிகளை மேற்கொள்வர். இம்முறை நான்கு கட்டங்களை உள்ளடக்கிய இரு முக்கிய அம்சங்களை இணைத்து பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிட்சார்த்த சோதனைக்குப் பிறகு மேலும் சில மையங்களில் அதே போன்று நடத்தப்படும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin கூறினார்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு