May 27, 2026
Thisaigal NewsYouTube
சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி
தற்போதைய செய்திகள்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

Share:

கோலாலம்பூர், மே.27-

தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மீதான அத்துமீறல்கள் குறித்து, மனித உரிமை ஆணையமான சுஹாகாம் வெளியிட்டுள்ள பொது விசாரணை அறிக்கைகளில் கண்டறியப்பட்டுள்ளவைகளை ஆய்வு செய்வதில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக மலேசிய சிறைத் துறை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களும், பரிந்துரைகளும், குறிப்பாக சிறை நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் மிகக் கவனமாக ஆய்வு செய்யப்படும் என சிறைத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையை முழுமையாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் சிறைத் துறை உறுதியளித்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜனவரி 17-ஆம் தேதி, தைப்பிங் சிறையில், கைதிகள் இடமாற்றம் செய்யப்படும் போது ஏற்பட்ட கலவரத்தில், கைவிலங்கிடப்பட்ட கைதிகள் மீது மிதமிஞ்சிய வன்முறை, மிளகாய்த்தூள் தூவப்பட்டது மற்றும் மருத்துவப் பதிவுகளைப் போலியாகத் தயாரித்தது போன்ற காரணங்களால் ‘Gan Chin Eng’ என்ற கைதி மரணமடைந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர் என சுஹாகாம் அறிக்கை கூறுவது குறிப்பிடத்தக்கது.

Related News

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சி... | Thisaigal News