May 27, 2026
Thisaigal NewsYouTube
ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்
தற்போதைய செய்திகள்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

Share:

கோலாலம்பூர், மே.27-

ஹோட்டல் அறையில் ketamine மற்றும் MDMA போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர், நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரு மலேசியர்களான 24 வயது Ivan Wong Yi Xian, 36 வயதான Chong King Jun உள்ளிட்ட 6 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

கடந்த மே 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், கோலாலம்பூரிலுள்ள பிரபல ஹோட்டல் அறையில், 1.5 கிராம் ketamine மற்றும் 0.7 கிராம் MDMA வைத்திருந்ததாக அவர்கள் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கானது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34 -இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 1 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்