Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்
தற்போதைய செய்திகள்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

Share:

கோலா குபு பாரு, மே.27-

புக்கிட் சங்காட் அசா பகுதியில் மலையேற்றத்தின் போது மரணமடைந்த 19 வயது இளம் பெண் நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் தொடர்பான வழக்கை போலீசார் திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர்.

நேற்று காலை மீட்கப்பட்ட அப்பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை 10.50 மணியளவில், குடும்பத்தினருடன் புக்கிட் சங்காட் அசா மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நூர் இஸ்ஸாத்தி, வெப்பமும் சோர்வும் காரணமாக குடும்பத்தினரை விட்டுச் சற்று தூரம் முன்னதாக நடந்து சென்றதாகக் கூறப்படுகின்றது.

அதன் பின்னர், அவர் மாயமான நிலையில், நான்கு நாட்கள் தேடுதலுக்குப் பின் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News