Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆகாயப்படை விமானம் விபத்துக்குள்ளானது: கெடா விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆகாயப்படை விமானம் விபத்துக்குள்ளானது: கெடா விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது

Share:

அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.19-

இன்று காலை 11.30 மணியளவில் ஆகாயப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கெடாவில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமானத்தை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காக ஓடுபாதை மூடப்பட்டதாக அந்த விமானத்தை வழி நடத்தி வரும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து இதுவரை எந்தவோர் அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Related News