கோலாலம்பூர், அக்டோபர்.29-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புதியதாகப் பொருத்தப்பட்டுள்ள ஏரோடிரேன் ரயில் சேவையில் அடிக்கடி தடங்கள் ஏற்பட்டு வருவது தொடர்பில் அந்த ரயில் திட்ட நிர்மாணிப்பில் லஞ்ச ஊழல் அம்சங்கள் இருப்பதாக அதிகாரத்துவ புகார் பெற்றால் மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்ளும் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து புகார் கிடைக்காத வரை இவ்விவகாரம் தொடர்பில் எஸ்பிஆர்எம் விசாரணை அறிக்கையைத் திறக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
கேஎல்ஐஏ 1 இல் இதுவரையில் இரண்டு முறை ஏரோடிரேன் சேவையில் பழுது ஏற்பட்டுள்ளது. ஆகக் கடைசியாக நேற்று அதிகாலையில் நிகழ்ந்தது. இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை ஒன்றை திறக்குமாறு அபாட் ( APAD ) எனப்படும் தரைமார்க்க பொது போக்குவரத்து வாரியத்திற்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்பில், இவ்விவகாரத்தில் எஸ்பிஆர்எம் தலையிடுமா? என்று கேட்ட போது அஸாம் பாக்கி கேற்கண்டவாறு தெரிவித்தார்.








