Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அம்பாங் ஜாஜாரில் கையெறி குண்டு கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

அம்பாங் ஜாஜாரில் கையெறி குண்டு கண்டு பிடிக்கப்பட்டது

Share:

புக்கிட் மெர்தாஜாம், அம்பாங் ஜாஜாரில் திடக்கழிவுப்பொருட்கள் அகற்றும் தளத்தில் கை​யெறி குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவுப்பொருட்களை அகற்றும் பணியாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கையெறி குண்டு என்று சந்தேகிக்கப்படும் ஒரு இரும்புப்பொருள் அவ்விடத்தில் ​மீட்கப்பட்டதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போ​​லீஸ் தலைவர் தான் செங் சான் தெரிவித்துள்ளார்.

துருப்பிடித்திருந்த அந்த வெடிக்குண்டு, செயலாக்கத் தன்மையை கொண்டது என்பது பரிசோதனையிலால் தெரி​யவந்துள்ளது. அந்த குண்டை செயலிழக்கச் செய்ய பினாங்கு போ​லீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு அழிப்பு பிரிவின் உதவி நாடப்பட்டதாக தான் செங் சான் மேலும் கூறினார்.

Related News