கோலாலம்பூர், ஜனவரி.24-
கடந்த 2025-ஆம் ஆண்டு, சோதனைச் சாவடிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்டிருந்த 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது முறையற்ற ஒப்புதல்கள் மற்றும் முத்திரையிடுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய மீறல்களானது எதிர்காலத்தில் தேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பெரும் அபாயங்களை ஏற்படுத்தும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்காக முறையற்ற முறையில் முத்திரையிடும் பழக்கமானது, நடைமுறைச் சட்டங்களின் கடுமையான விதிமீறல்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நுழைவிடங்களில், குறிப்பாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள சுங்க இலாகா, தனிமைப்படுத்தும் இடம் மற்றும் பாதுகாப்புச் சோதனை வளாகங்களில், கடமைகளை மீறும் அதிகாரிகள் மீது எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
செயல்பாட்டுத் தரநிலைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்வதற்காக, திடீர் சோதனைகள் மற்றும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








