Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தாபோங் ஹாஜி நிறுவனத்தில் 72,000 ரிங்கிட் முறைகேடு? இரு முன்னாள் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில்!
தற்போதைய செய்திகள்

தாபோங் ஹாஜி நிறுவனத்தில் 72,000 ரிங்கிட் முறைகேடு? இரு முன்னாள் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில்!

Share:

தாபோங் ஹாஜியின் துணை நிறுவனமான டி.எச்.பி. பினா சென்டிரியான் பெர்ஹாட்-ல் 72,000 ரிங்கிட் அபராதத் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், இரு முன்னாள் உயர் அதிகாரிகள் இன்று தனித்தனி செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

முன்னாள் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாளர் 56 வயது நஸஹ்ருதீன் அகமத், நம்பிக்கை மோசடி தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளையும், முன்னாள் துணைப் பொது மேலாளர் 55 வயது தெங்கு கமரோல்ஹிஷாம் தெங்கு கமரூதீன், உடந்தையாக இருந்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டனர்.

இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணை கோரினர்.

குற்றப்பத்திரிகையின்படி, ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்பட்ட 22,400, 25,600 மற்றும் 24,000 ரிங்கிட் அபராதத் தொகைகள், நசாருடினின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

இதனிடையே, நசாருடினுக்கு 50,000 ரிங்கிட், தெங்கு கமரொல்ஹிஷாமுக்கு 45,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்