Sep 7, 2026
Thisaigal NewsYouTube
நேபாள வெள்ளப் பேரிடர்: மீட்புப் பணிக்கு சனிக்கிழமை புறப்படுகிறது  மலேசிய ஸ்மார்ட்  குழு
தற்போதைய செய்திகள்

நேபாள வெள்ளப் பேரிடர்: மீட்புப் பணிக்கு சனிக்கிழமை புறப்படுகிறது மலேசிய ஸ்மார்ட் குழு

Share:

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் மீட்புப் பணிக்கு, மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான ஸ்மார்ட், வரும் சனிக்கிழமை நேபாளம் புறப்படுகிறது.

நேபாள அரசுடன் வெளியுறவு அமைச்சு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஸ்மார்ட் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசியப் பேரிடர் நிர்வாக நிறுவனம், என். ஏ. டி. எம். ஏ, ஸ்மார்ட் குழு செப்டம்பர் 5ஆம் தேதி காலை சுபாங் விமானத் தளத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திபெத் மற்றும் நேபாளத்தில் சிக்கிய 77 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் காத்மாண்டுவுக்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

எனினும், மேலும் 55 மலேசியர்களின் நிலை இன்னும் தெரியவில்லை என அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், பேரிடருக்குப் பிந்தைய மீட்புப் பணிகளை ஆதரிக்கவும் நேபாளத்திற்கு மலேசியா 40 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கவுள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி, பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படும் திடீர் வெள்ளம், நேபாளத்தின் ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து