Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஓடும் காரில் இரு சிறுமிகள் ஆபத்தான சாகசம் – பேராக் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஓடும் காரில் இரு சிறுமிகள் ஆபத்தான சாகசம் – பேராக் போலீஸ் விசாரணை

Share:

பேராக் மாநிலத்தில், ஓடும் காரின் மேற்கூரை வழியாக இரண்டு சிறுமிகள் வெளியே எட்டிப் பார்த்து சாகசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேரு-ஜேலாபாங் நெடுஞ்சாலையில் நேற்று நடந்த இச்சம்பவத்தின் 21 விநாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஈப்போ போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜீப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பாதுகாப்பற்ற முறையில் இரண்டு சிறுமிகள் மேற்கூரை வழியே சாகசம் செய்த காட்சிகள் சமூக ஊடக வாசிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related News