Sep 15, 2026
Thisaigal NewsYouTube
30 ஆயிரம் சிறார் ஆபாச காணொளிகளுடன் ஆடவர் கைது - தங்கள் ஊழியர் அல்ல என யுகேஎம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

30 ஆயிரம் சிறார் ஆபாச காணொளிகளுடன் ஆடவர் கைது - தங்கள் ஊழியர் அல்ல என யுகேஎம் விளக்கம்

Share:

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நூர் ஃபித்ரி அஸ்மீர் நோர்டின் தங்களது ஊழியர் அல்ல என்று யு.கே.எம் எனப்படும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தத்துவப் படிப்பில் முனைவர் படிப்பை முடித்த முன்னாள் மாணவர் என்றும் யு.கே.எம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று புதன்கிழமை அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், நூர் ஃபித்ரி பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பதை உறுதிப்படுத்தியிருப்பதோடு, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொழில்முறை கல்விச் சூழலை வழங்குவதில் யு.கே.எம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சிறார் ஆபாசக் குற்றங்களுக்காக நூர் ஃபித்ரி சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் 2016-ஆம் ஆண்டு யு.கே.எம்-ல் மீண்டும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டு பி.எச்.டி படித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அவரது கல்வித் திறன் மற்றும் நன்நடத்தையை அடிப்படையாகக் கொண்டு அவரை மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததாக யு.கே.எம் விளக்கம் அளித்துள்ளது.

Related News