Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் காட்டு யானை அட்டகாசம்: மனிதர்–வனவிலங்கு மோதல் அச்சம் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் காட்டு யானை அட்டகாசம்: மனிதர்–வனவிலங்கு மோதல் அச்சம் அதிகரிப்பு

Share:

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், கிளந்தான் போஸ் கோப் பகுதியில் முகாமிட்டிருந்த சுமார் 150 பேரை வயது முதிர்ந்த ஆண் காட்டு யானை ஒன்று நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மனிதர்–யானை மோதல் குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த யானை சுமார் 40 யானைகளைக் கொண்ட ‘ID நெங்கிரி’ கூட்டத்தைச் சேர்ந்ததாக நம்பப்படுவதாக அம்மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கங்கள் துறையான பெர்ஹிலித்தான் தெரிவித்துள்ளது.

உணவு தேடி இயற்கையான நடமாட்டப் பாதையில் செல்லும் யானைகள் எப்போது வேண்டுமானாலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரக்கூடும் என்றும் பெர்ஹிலித்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, போஸ் கோப் பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் காட்டு யானைகளை நெருங்கவோ, துரத்தவோ, வாகன சத்தத்தை ஏற்படுத்தவோ அல்லது அவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலம் சீரமைத்தல், தோட்டத் திட்டங்கள் மற்றும் நெங்கிரி அணைத் திட்டம் போன்றவை யானைகளின் வாழ்விடத்தை பாதித்து, அவற்றை குடியிருப்புகளை நோக்கி வரச் செய்யக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி