Sep 7, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ பொதுப் பேரவை: தேர்தலை முன்கூட்டியே நடத்தும் கோரிக்கை எழுமா?
தற்போதைய செய்திகள்

அம்னோ பொதுப் பேரவை: தேர்தலை முன்கூட்டியே நடத்தும் கோரிக்கை எழுமா?

Share:

அம்னோவின் அடுத்த பொதுப் பேரவையில், கூட்டரசு அரசாங்கத்தில் கட்சியின் எதிர்காலப் பாதை முதல் 16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது வரை பல்வேறு விவகாரங்கள் அனல் பறக்க விவாதிக்கப்படவுள்ளன.

அம்னோவின் பொதுப் பேரவை அடுத்த வாரம் புதன்கிழமை தொடங்கி, சனிக்கிழமை நிறைவு பெறும்.

அம்னோவின் 191 டிவிஷன்களில் இருந்து 157 தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வஜ்டீ டுசூக்கி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு மற்றும் ‘ரூமா பாங்சா’ எனப்படும் கட்சியில் மீண்டும் இணைய விரும்புவோருக்கான திட்டம் ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன.

அதேவேளை, பாரிசான் நேஷனல் தலைவர்கள் எதிர்கொள்ளும் அண்மைய சட்ட நடவடிக்கைகள் மற்றும் GE16-ஐ முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பேரவையில் எழலாம்.

எந்த விவகாரத்தையும் பிரதிநிதிகள் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படுவார்கள் என அஸ்ராஃப் வஜ்டீ தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து