Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நல்ல செய்தியா… கெட்ட செய்தியா?” – ஒரு தகவலுக்காக இரவெல்லாம் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்!
தற்போதைய செய்திகள்

நல்ல செய்தியா… கெட்ட செய்தியா?” – ஒரு தகவலுக்காக இரவெல்லாம் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

Share:

நேபாள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள மலேசியர்களின் குடும்பங்களின் காத்திருப்பு நாளுக்கு நாள் வேதனையாகி வருகிறது.

கைலாஷ் மலைக்கு ஆன்மிகப் பயணம் செல்ல, கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்ததால் இணைந்தார் 48 வயதான கோமதி ரெத்தினம்.

அவரது சகோதரர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில், பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கோமதி இந்தப் பயணத்தில் இணைந்ததாக தெரிவித்தார்.

பயணம் எளிதானதல்ல என்பதால் குடும்பத்தினர் கவலைப்பட்டிருந்தாலும், இறைவனின் அழைப்பு என்ற நம்பிக்கையுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு கோமதி புறப்பட்டுச் சென்றதாக அவர் கூறினார்.

ஆனால், இப்போது அந்த மகிழ்ச்சி… கண்ணீராக மாறியுள்ளது.

தாயிடம் தினமும் தொலைபேசியில் பேசி வந்த கோமதியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

“நாங்கள் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. நல்ல செய்தியா, கெட்ட செய்தியா… ஏதாவது ஒரு தகவலுக்காகத்தான் காத்திருக்கிறோம்,” என அவரது சகோதரர் கண்ணீருடன் கூறினார்.

இதற்கிடையில், பயணத்துக்கு முன் தனது மகள் ராஜிதா சிவன் எந்தவிதமான இறுதி செய்தியையும் கூறவில்லை என அவரது தந்தை பி. சிவன் தெரிவித்துள்ளார்.

குடும்பங்களுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை… அன்புக்குரியவர்கள் உயிருடன் திரும்ப வேண்டும் என்பதுதான்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி