சுங்கை பூலோ சிறையில் ஒரு விஐபி கைதி அறை இருப்பதை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது, அண்மையில் 'அமாங் மாட்' என்பவர் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்திருந்தார்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் இது குறித்து தெரிவிக்கயில், சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மலேசிய சிறைத்துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி எனக் கூறினார்.
ஓராண்டு காலமாக அமைச்சில் பணியாற்றி இருக்கின்ற நிலையில்,நாட்டில் எந்த சிறைச் சாலையிலும் அவ்வாறான அறை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
ஆதாரமற்றக் குற்றச் சாட்டுகளை ‘அபாங் மாட்' உட்பட யாரும் பரப்ப வேண்டாம் என அமைச்சர் வலியுறுத்தினார்.








