Apr 8, 2026
Thisaigal NewsYouTube
புந்தோங் சந்தையில்  மோதல்: மேலும் மூவர் கைது - இருவர் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

புந்தோங் சந்தையில் மோதல்: மேலும் மூவர் கைது - இருவர் மருத்துவமனையில் அனுமதி

Share:

ஈப்போ, புந்தோங் பொதுச் சந்தையில் நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியான வேளையில் சில காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, மூன்று உள்ளூர் இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் பேராக் மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் D7 பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் 28 முதல் 34 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நேற்று அதிகாலை 1.00 மணியளவில் கைது செய்யப்பட்ட 23 வயது முதல் சந்தேக நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிடிபட்ட மூவரும் ஈப்போ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களை ஏப்ரல் 9 ஆம் தேதி வரை 2 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் .

முதற்கட்ட விசாரணையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருந்தாலும் உடல்நிலை பலவீனமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்கான உண்மையான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News