Jul 1, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம்: தலைமைத்துவத்தின் முடிவை ஏற்கிறது அம்னோ
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம்: தலைமைத்துவத்தின் முடிவை ஏற்கிறது அம்னோ

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசாரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்திடம் ஒப்படைப்பதாக மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அம்னோவின் 80-வது ஆண்டு மாநாட்டில் பேசிய ஜலாலுடின், மந்திரி பெசார் நியமனம் என்பது தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றார். தற்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் மீதான நம்பிக்கையை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே மீட்டுக் கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தெளிவான வழிகாட்டல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார மரபு சார்ந்த விவகாரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இந்த முடிவுக்குக் காரணம் என்றும், இது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். ஒருவேளை தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்த பொதுத்தேர்தல் வரை எதிர்க்கட்சியாகச் செயல்படவும் தாங்கள் தயார் என ஜலாலுடின் அலியாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்."

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை