Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தாய் தந்தையரைக் கொன்ற நபருக்கு 40 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாய் தந்தையரைக் கொன்ற நபருக்கு 40 ஆண்டு சிறை

கோலாலம்பூர், ஜூன்.18-

கடந்த ஆண்டு கோலாலம்பூர், கம்போங் சுங்கை பென்சாலாவில் தனது தாய் தந்தையரை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் அந்த நபருக்கு 24 பிரம்படித் தண்டனையும் விதிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி உத்தரவு பிறப்பித்தார்.

அஃபெண்டி முகமட் அகுஸ் என்ற முகமட் அலிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது அந்த நபர் அமைதியாகக் காணப்பட்டார். சம்பந்தப்பட்ட நபர் புரிந்த பாதகச் செயல் மிகக் கடுமையானதாகும். எனவே உரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று முனியாண்டி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நபர், 82 வயது தனது தந்தையையும், 72 வயது தாயாரையும் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →