Feb 13, 2026
Thisaigal NewsYouTube
டேசா பாஹ்லாவான் பகுதியில் விபச்சாரக் கும்பல் முறியடிப்பு - 40 பேர் கைது
தற்போதைய செய்திகள்

டேசா பாஹ்லாவான் பகுதியில் விபச்சாரக் கும்பல் முறியடிப்பு - 40 பேர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

டேசா பாஹ்லாவான் பகுதியில் உள்ள மூன்று மாடி சொகுசு பங்களா ஒன்றில் குடிநுழைவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்டு வந்த விபச்சார செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையின் போது, 21 முதல் 43 வயது வரையிலான 40 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விபச்சார கும்பலின் மூளையாக, செயல்பட்டதாக நம்பப்படும் சீன நாட்டவரும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை துணை தலைமை இயக்குநர் டத்தோ லொக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சுற்றுலா விசாவைக் கொண்டிருந்ததோடு, மேலும் சிலர் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் இது போன்ற சம்பவங்களை முறியடிக்க தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் லொக்மான் தெரிவித்துள்ளார்.

Related News

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டைச் சோதனையிடப் போவதாக ரஃபிஸி ரம்லி தகவல்

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டைச் சோதனையிடப் போவதாக ரஃபிஸி ரம்லி தகவல்

சைபர் குற்ற மசோதா ஓரினச்சேர்க்கையாளர்களின் டேட்டிங் செயலிகளைக் கட்டுப்படுத்தும்: ஸாஹிட் ஹமிடி

சைபர் குற்ற மசோதா ஓரினச்சேர்க்கையாளர்களின் டேட்டிங் செயலிகளைக் கட்டுப்படுத்தும்: ஸாஹிட் ஹமிடி

சரவாக் லுண்டுவில் இளம் பெண் கொலை - கைகலப்பால் நேர்ந்த கொடூரம்

சரவாக் லுண்டுவில் இளம் பெண் கொலை - கைகலப்பால் நேர்ந்த கொடூரம்

"அஸாம் பாக்கி பதவி விலக வேண்டும்" - சோகோ வணிக வளாகம் முன்பு பேரணி ஏற்பாடு

"அஸாம் பாக்கி பதவி விலக வேண்டும்" - சோகோ வணிக வளாகம் முன்பு பேரணி ஏற்பாடு

“என்னிடம் மறைக்க எதுவும் இல்லை - சுயேட்சை விசாரணை குழுவை எதிர்கொள்ளத் தயார்" - அஸாம் பாக்கி திட்டவட்டம்

“என்னிடம் மறைக்க எதுவும் இல்லை - சுயேட்சை விசாரணை குழுவை எதிர்கொள்ளத் தயார்" - அஸாம் பாக்கி திட்டவட்டம்

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: கொலைக் குற்றச்சாட்டை மறுத்த 15 வயது மாணவர் விசாரணை கோரினார்

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: கொலைக் குற்றச்சாட்டை மறுத்த 15 வயது மாணவர் விசாரணை கோரினார்