Dec 2, 2025
Thisaigal NewsYouTube
துயரத்தை நகைச்சுவையாக்குவதா? மனிதாபிமானமற்ற செயலாகும்
தற்போதைய செய்திகள்

துயரத்தை நகைச்சுவையாக்குவதா? மனிதாபிமானமற்ற செயலாகும்

Share:

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச். 370 விமானம் காணாமல் போன சம்பவத்தை நகைச்சுவைக்குரிய பொருளாக பயன்படுத்தியுள்ள சிங்கப்பூரின் பெண் நகைச்சுவையாளர் ஜோஸ்லின் சியா வின் செயல், மனிதாபிமானமற்றதாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வர்ணித்துள்ளார்.

எந்தெந்த விவகாரத்தை நகைச்சுவையாக்குவது என்பது குறித்து தெரியாமலேயே நகைச்சுவை என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

200 க்கும் மேற்பட்டஉயிர்களை காவு கொண்ட எம்.எச். 370 விமான பேரிடர், நகைச்சுவையாக தெரிகிறதா? என்று அந்த பெண் நகைச்சுவையாளரை நோக்கி அந்தோணி லோக் கேள்வி எழுப்பினார்.

Related News