நீலாயில் வெளிநாட்டு பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் வெளிநாட்டு ஆடவரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் மாநிலம் பூச்சோங்கில், அந்த ஆடவர், இன்று கைது செய்யப்பட்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.
கொலையுண்ட பெண்ணிடம், 10 ஆயிரம் ரிங்கிட் கடன் வாங்கியது தொடர்பில் இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
42 வயதான அந்த ஆடவரை, சௌஜானா புச்சோங் அருகே இன்று அதிகாலை 12.55 மணியளவில் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தையும், அப்பெண்ணின் சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்றால், சமூக ஊடகங்களில் அதைப் பற்றி வெளியிடப்போவதாக அப்பெண் மிரட்டியதையடுத்து, அவரது கழுத்தை அறுத்ததை அந்த ஆடவர் ஒப்புக் கொண்டதாகவும் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.








