Feb 22, 2026
Thisaigal NewsYouTube
காபுல் ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணம் கண்டறியப்பட்டது: இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

காபுல் ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணம் கண்டறியப்பட்டது: இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Share:

உலு லங்காட், பிப்ரவரி.22-

Semenyih, காபுல் ஆற்றில் ஏற்பட்ட துர்நாற்றத்திற்கு மாஹ்கோத்தா பெரானாங் தொழில்பேட்டை பகுதியில் உள்ள இரு மறுசுழற்சி நிறுவனங்களே காரணம் என சிலாங்கூர் மாநில அரசு கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனங்கள் எண்ணெய்க் கழிவுகளை வடிகாலில் வெளியேற்றியதால் ஆற்று நீர் மாசடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு ஒரு மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில அரசின் துரித நடவடிக்கையாலும், அணை நீர் திறந்து விடப்பட்டதாலும் சுமார் 400 ஆயிரம் பயனீட்டாளர்களுக்கு ஏற்படவிருந்த குடிநீர் விநியோகத் தடை தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு Semenyih நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் தனது வழக்கமான செயல்பாட்டிற்குத் திரும்பியுள்ளது.

Related News