கோத்தா கினபாலு, பிப்ரவரி.14-
தனது முன்னாள் காதலியைக் கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக 33 வயது ஆடவருக்கு கோத்தா கினபாலு உயர்நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு, மே மாதம், கோத்தா கினபாலுவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், 21 வயதான Nurul Ain Silien-ஐ, Haider Daniel Chung Abdullah என்ற அந்த ஆடவர் கத்தியால் வெறி கொண்டு குத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அப்பெண்ணை அவர், திட்டமிட்டே கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலுக்கு முந்தைய நாள் கத்தியை வாங்கியுள்ளதாகவும் நீதிபதி Alexander Siew தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பக்கவாட்டில் தொடர்ச்சியாக பல முறையும், பின் பகுதியில் குறைந்தது எட்டு முறைக்கு மேலும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதை நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், Chung தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.








