கடந்த ஆண்டு சிறுவர் ஒருவருக்கு அடையாள கார்டு எடுப்பதில் பொய்யான தகவல்களை உள்ளடக்கிய பாரத்தை சமர்ப்பித்து , ஏமாற்று வேலை புரிந்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு நெகிரி செம்பிலான், பகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
42 வயதான கே. கலைவாணி என்ற அந்தமாது, மாஜிஸ்திரேட் நோர்ஷஸ்வானி இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. மேற்கண்ட அபராதத் தொகையை செலுத்த அந்த மாது தவறுவாரேயானால் அவருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சிறுவன் ஒருவனின் சொந்த தாயாரின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ள பிற ப்பு சான்றிதழை பயன்படுத்தி, அடையாள கார்டு எடுப்பதற்கு கலைவாணி முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இக்குற்றத்தை கடந்த மார்ச் 9 ஆம் தேதி ஜெம்போல் தேசிய பதிவு இலாகா அலுவலகத்தில் புரிந்ததாக கலைவாணிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








