Sep 23, 2026
Thisaigal NewsYouTube
உலு சிலாங்கூரில் பள்ளி ஆசிரியர் தூக்கில் தொங்கி மரணம்
தற்போதைய செய்திகள்

உலு சிலாங்கூரில் பள்ளி ஆசிரியர் தூக்கில் தொங்கி மரணம்

Share:

உலு சிலாங்கூர், ஆகஸ்ட்.01-

பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியர் ஒருவர் தனக்கு தானே காயப்படுத்திக் கொண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அறையில், பெண் ஆசிரியர் ஒருவர் தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக நேற்று காலை 7:15 மணியளவில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் எம். மணிமாறன் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையிலும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையிலும் அவர் தூக்கிலிட்டுக் கொண்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் வேளையில் இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொண்டு உதவ வேண்டும் என்று மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News