கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
நாடாளுமன்றத்தில் விவாதத்திலிருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ள நகர்புறப் புதுபித்தல் சட்ட மசோதாவில் ஜசெக.விற்கு தனிப்பட்ட நோக்கம் இருக்கிறது என்று கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வன்மையாக மறுத்துள்ளார்.
இந்த உத்தேசச் சட்ட மசோதாவை ஜசெக கொண்டு வரவில்லை. மடானி அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விளக்கினார்.
இன்று சிரம்பான், சிக்காமாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தின் இந்த உத்தேச மசோதாவை ஜசெக கொண்டு வந்த மசோதாவைப் போல் குறிப்பிட்டத் தரப்பினர் அரசியலாக்கி வருகின்றனர் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








