கோலாலம்பூர், அக்டோபர்.16-
நாடெங்கிலும் பகடி வதைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ள பள்ளிகளில், முதற்கட்டமாக சிசிடிவி-க்கள் நிறுவப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி, எதிர்கால பகடி வதைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பு முயற்சிக்காக அரசு மொத்தம் 3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது.
இதன் அடிப்படையில், நாடு முழுவதும் 200 விடுதிகளில் CCTV அமைக்கும் பணிகள் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்குகின்றன.
இத்திட்டம் வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான பகடி வதை சம்பவங்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளன என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.








