Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டமில்லை

புத்ராஜெயா, மே.29-

பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்பொழுது சூழலில் அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டம் இல்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் துறை ஊழியர்களுடன் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில், "அவர்கள் தற்போது விடுப்பில் உள்ளனர். விடுப்பில் உள்ள அமைச்சர்களை மாற்ற முடியாது," என அன்வார் தெரிவித்தார்.

ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி, 2025 ஆம் ஆண்டு பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இருவரின் விடுப்புக் கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் பிரதமரால் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை