கெடா மற்றும் பினாங்கு தொடர்பான வரலாற்று உண்மைகள் சுதந்திரத்திற்கு முன் திரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை சரிசெய்வதற்கான முயற்சிகளை கெடா மாநில அரசாங்கம் தொடரும் என்று கெடா மந்திரி பெசார் டத்ஹோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஆய்வுகளின் விளைவாக வரலாற்று ஆசிரியர்கள் பல புதிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். எனவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து கெடாவின் வரலாற்று திரிபுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் சனூசி கேட்டுக்கொண்டார்.
கெடா மாநிலம் மீதான 200 ஆண்டு கால வரலாற்று உண்மைகள், தற்போதைய தலைமுறையினரால் சரி செய்யப்படாவிட்டால், சுயநலன் சார்ந்த சில கும்பல்களால் கெடா மாநிலத்தின் உண்மையான வரலாற்று குறிப்புகள் திரிக்கப்பட்டு, அவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் அவல நிலைக்கு தள்ளப்படலாம் என்று சனூசி எச்சரித்துள்ளார். .
கெடா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக ஆகக்கடைசியாக நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் சனூசி இதனை தெரிவித்தார்.
கெடா அரசினால் வழங்கப்பட்ட பினாங்கிற்கான குத்தகை ரத்து செய்யப்பட்டதாகவும் / அது குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் வரலாற்று வல்லுநர்கள் அண்மையில் தெரிவித்து இருந்தனர்.
குறிப்பாக 1948 ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் மலாய் ஆட்சியாளர்களும் பிரிட்டிஷ் பிரதிநிதி எட்வாட் ஜென்ட்டும் கையெழுத்திட்டப் பின்னர் கெடா அரசின் பினாங்கு குத்தகை ரத்து செய்யப்பட்டு விட்டதாக வரலாற்றுப் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரம்லான் அடாம் கடந்த செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியிருந்தார்.
எனினும் கெடா மாநிலத்தின் சிதைக்கப்பட்ட வரலாற்று உண்மையை அடிப்படையாக கொண்டு அந்த பேராசியரியர் பேசியிருக்கிறாரே தவிர அது உண்மையான வரலாற்று குறிப்புகள் அல்ல என்று கெடா மந்திரி பெசார் வாதிட்டுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


